தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

50 அடி ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுமி: உடல்தான் மீட்பு

1 mins read
9f22621e-4d1d-4ea4-b43f-649d6351c5ee
ஆழ்துளைக் குழியில் விழுந்த சிறுமியை மீட்கும் பணி பல மணி நேரமாக நடந்து தோல்வியில் முடிந்தது. படம்: தமிழக ஊடகம் -

ஹரியானா: ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங் புரா கிராமத்தில் ஞாயிறு மாலை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 50 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட ஐந்து வயது சிறுமி நேற்று இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

கிணற்றில் சிறுமி தலைகீழாக விழுந்ததால் அவரின் கால் மட்டுமே படச் சாதனத்தில் தெரிந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சிறுமி சுவாசிப்பதற்காக குழியினுள் ஆக்ஸிஜன் தொடர்ந்து கொடுக்கப்பட்டது. உயிருடன் மீட்பதற்காக ஆழ்துளைக் கிணற்றின் அருகே பக்கவாட்டில் குழி தோண்டினர். மீட்கப்பட்டவுடன் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

மீட்பு முயற்சி 10 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது என்றும் சிறுமி உடல்தான் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.