படம் பார்க்கச் சென்ற கணவனையும் அவர் காதலியையும் அடித்துத் துவைத்த மனைவி

படம் பார்க்கச் சென்ற கணவனையும் அவர் காதலியையும் அடித்துத் துவைத்த மனைவி

1 mins read

இந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் வேறு ஒரு பெண்ணுடன் திரைப்படத்துக்குச் சென்ற தன் கணவரைக் கையும் களவுமாகப் பிடித்து அவரையும் அந்தப் பெண்ணையும் மனைவி தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் ஒரே பரபரப்பாகியது.

இந்தூர் அருகே காஜ்ரன்னாஎன்ற ஊரில் இருக்கும் ஒரு திரையரங்கு முன்பு இரண்டு பெண்கள் மோதிக்கொண்டனர்.

தன் கணவரை வேறு ஒரு பெண் திரைப்படத்துக்கு அழைத்துச் சென்றதை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்த மனைவி, கையும் களவுமாக இருவரையும் பிடித்து தாக்கியதாகத் தெரியவந்தது.

அரை மணிநேரத்துக்கு மேலாக இரண்டு பெண்களும் துடைப்பத்தை எடுத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸ் இரண்டு பெண்களையும் விலக்கிவிட்டு கணவரையும் பெண்களையும் எச்சரித்து அனுப்பியது. பிரச்சினை இந்த அளவுக்குப் போனதை அடுத்து கணவர் தன் மனைவியுடன் வீடு திரும்பினார்.