கோல்கத்தாவில் இன்று அனைத்துலக இந்திய அறிவியல் விழா தொடக்கம்

கோல்கத்தாவில் இன்று அனைத்துலக இந்திய அறிவியல் விழா தொடக்கம்

1 mins read

கோல்கத்தா: இந்தியாவின் 5வது அனைத்துலக இந்திய அறிவியல் விழா மேற்கு வங்காள மாநிலம் கோல்கத்தாவில் இரு இடங்களில் இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை நடக்கிறது. இதனைப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தவாறு இன்று காணொளிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை எல்லாரும் சேர்ந்து கொண்டாடவும் உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களையும் அரவணைத்துச் செல்லும் வகையிலும் இந்திய அறிவியல் விழாவை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், கடந்த 2015 முதல் வெற்றிகரமான முறையில் நடத்தி வருகிறது.