புதுடெல்லி: காஷ்மீரை லடாக் மற்றும் காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் புதிய இந்திய வரைபடம் வெளியிடப்பட்டது. இதில் புதிதாகப் பிரிக்கப்பட்ட இரு யூனியன் பிரதேசங்களும் இடம்பெற்றிருந்தன.
இதனிடையே, இந்த வரைபடம் தவறானது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு கடுமையாகக் குறைகூறியது. இதனைச் சட்டப்பூர்வமாக ஏற்றுகொள்ள முடியாது என்றும் ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் விதிமுறைகளை இந்தியா அப்பட்டமாக மீறியுள்ளதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

