மும்பை-புனே நெடுஞ்சாலையில் விபத்து: ஐவர் பலி, 40 பேர் காயம்

மும்பை-புனே நெடுஞ்சாலையில் விபத்து: ஐவர் பலி, 40 பேர் காயம்

1 mins read

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை-புனே நெடுஞ்சாலையில் காராட் என்ற நகரில் இருந்து மும்பைக்குச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் ஆடம்பர பேருந்து நேற்று அதிகாலை நேரத்தில் சாலையில் இருந்து விலகி ஓடி 40 அடி பள்ளத்தில் விழுந்துவிட்டது. இந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் மாண்டனர். 40 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பேருந்தில் மொத்தம் 47 பேர் பயணம் செய்ததாக காராட் நகர போலிஸ் தலைவர் தெரிவித்தார்.