கல்லூரி மாணவன் சுட்டுக்கொலை; இளைஞன் நீதிமன்றத்தில் சரண்

கல்லூரி மாணவன் சுட்டுக்கொலை; இளைஞன் நீதிமன்றத்தில் சரண்

1 mins read
b14dd91e-5e30-43d2-b68b-45a3175c9a8c
-

தமிழகத்தில் சென்னைக்கு அருகிலுள்ள வண்டலூரில் கல்லூரி மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் தொடர்பில் விஜய் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் நீதிமன்றத்தில் தானாவே சரண் அடைந்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

சுட்டுக்கொல்லப்பட்ட முகேஷ் என்ற மாணவரும் விஜய்யும் நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. நேற்று பிற்பகல் முகேஷ் விஜய்யைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றார். அங்கே விஜய் இருந்த அறைக்கு முகேஷ் சென்று சற்று நேரம் ஆன பிறகு அந்த அறையிலிருந்து திடீரென்று வெடிச்சத்தம் ஒலித்தது.

வெளியில் இருந்த விஜய்யின் தம்பி அந்த அறைக்குள் விரைந்து பார்த்தபோது முகேஷ் சுடப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது விஜய் 'தெரியாமல் சுட்டுவிட்டேன்' என்று கூறிவிட்டு, துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடியதாகச் சொல்லப்படுகிறது.

கடுமையாகக் காயமடைந்த முகேஷை சென்னை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்ற முயன்றார் விஜய்யின் தம்பி. ஆனால் சிகிச்சை பலனின்றி முகேஷின் உயிர் பிரிந்தது.

துப்பாக்கி யாருடையது, எப்படி அந்த இளைஞர் இவரைத் 'தெரியாமல்' சுட்டார் என்பது பற்றிய விளக்கங்கள் இன்னும் கொடுக்கப்படவில்லை.