கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு அருகே குடும்பத்துடன் வசித்து வந்த வயோதிக தம்பதியர், மரணத்திற்கு முன்பே தங்களுக்குக் கல்லறை கட்ட எண்ணினர்.
தங்களது வீட்டுக்கு அருகிலுள்ள தோட்டத்தில் இவர்கள் இரண்டு கல்லறைகளைக் கட்டி தாங்கள் இறந்த பிறகு அவற்றில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று தங்கள் பிள்ளைகளிடம் தெரிவித்தனர்.
தம்பதியரில் கணவன் 2008ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். அவரது மனைவி நேற்று காலமானார். வாழ்விலும் இணைந்திருந்ததுபோல் அவ்விருவர் மரணத்திலும் அந்தக் கல்லறையில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.

