ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடந்த கால்நடை கண்காட்சியில் இடம்பெற்ற முர்ரா இனத்தைச் சேர்ந்த பீமா என்ற எருமை 1,300 கிலோ எடை கொண்டது. ஆறரை வயதாகும் அதன் உரிமையாளர் ஜவகர் லால் ஜாங்கிட் அதன் பராமரிப்பு, உணவுக்காக மாத ரூ.1.5 லட்சம் செலவளிப்ப தாக கூறுகிறார்.
தினமும் ஒரு கிலோ நெய், அரைக் கிலோ வெண்ணெய், 200 கிராம் தேன், 25 லிட்டர் பால், ஒரு கிலோ முந்திரி-பாதாம் கொடுக்கிறார்.முர்ரா இனத்தை பாதுகாத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கண்காட்சிக்கு பீமாவை அழைத்து வருகிறோம் என்ற ஜவகரின் மகன் அரவிந்த் அதை விற்கப் போவதில்லை என்றார். பீமாவின் விலை ரூ.14 கோடி (S$2.7 மில்லியன்).

