வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு

புதுடெல்லி: உயர்ந்துவரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் துருக்கி, ஈரான், எகிப்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 80 முதல் 100 கண்டெய்னர்கள் வரை இறக்குமதி செய்யப்படவுள்ளது.

வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய உணவு, நுகர்வோர் விவகாரங்கள், பொது வினியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. அதில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்வது, உள்நாட்டில் விலை ஏற்றத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்துவது ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில்தான் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாசிக்கில் உள்ள லசல்கான் என்ற இடத்தில் மிகப்பெரிய வெங்காய சந்தை உள்ளது. கடந்த மாதங்களில் வடமாநிலங்களில் பெய்த கடும் மழையினால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெங்காயம் அழுகிவிட்டது. அறுவடை செய்த வெங்காயத்தையும் உரிய முறையில் சேமித்து வைக்க போதிய வசதி அங்கு இல்லை. சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்து விட்டதால் விலை பலமடங்கு ஏறிவிட்டது. கடந்த 2 நாட்களில் சில மாநிலங்களில் 1 கிலோ ரூ.90 வரை உயர்ந்துள்ளது.

வெங்காயம் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது. மத்திய சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயம் வெளிச் சந்தைக்கு எடுத்து வரப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டது.

தற்போது பருவம் மாறி மழைபெய்வதால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெங்காய விளைச்சல் இருந்தாலும் அது போதுமானதாக இல்லாததால் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!