காவி நிறம் பூசப்பட்ட கழிவறையை கோயில் என நினைத்து வழிபாடு

உத்தரப் பிரதேசத்தில் காவி நிறம் பூசப்பட்ட கழிவறையை, கோயில் எனக்கருதி பொதுமக்கள் வணங்கிச் சென்றுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் ஹமிர்பூர் மாவட்டத்திலுள்ள மாவ்தஹா பகுதியில் அரசு சார்பில் கழிவறை கட்டப்பட்டது. ஆனால், நீண்ட நாட்களாக அது பயன்பாட்டில் இல்லை.  அதனைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில், கழிவறைக்கு சாயம் பூச முடிவுசெய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அந்தக் கழிவறைக்கு காவி நிறம் பூசப்பட்டது.

அதனையடுத்து, காவி நிறம் பூசப்பட்ட கழிவறைப் பகுதியைக் கடந்து சென்றவர்கள், வாசலில் நின்று வணங்கிச் செல்லத் தொடங்கினர். சிலர் ஒருபடிக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த கழிவறை வளாகத்தின் வெளியே வழிபாடும் நடத்தியுள்ளனர்.

தகவலறிந்த மாவட்ட நிர்வாகம், காவி நிறத்தில் இருந்த கழிவறைக்கு ‘இள்ஞ்சிவப்பு’ நிறம் பூசியது. அதற்குப் பிறகுதான் பொதுமக்களுக்கு அது கோயில் இல்லை, கழிவறை என்பது தெரியவந்தது.