பால், தங்கம், மாடு, கடன்: வேடிக்கை

பால், தங்கம், மாடு, கடன்: வேடிக்கை

1 mins read
02353d33-430b-4a32-bf04-efea7b85d822
-

கோல்கத்தா: பசும்பாலில் தங்கம் இருப்பதாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியது, விவசாயி ஒருவரை அதிரடியாக யோசிக்க வைத்தது. தனது இரு மாடுகளுடன் 'மணப்புரம் கோல்டு' நிறுவனக் கிளைக்குச் சென்ற அவர், அந்த மாடுகளை வைத்துக்கொண்டு கடன் தருமாறு கேட்டுள்ளார். அதேபோல, மாடுகளை வைத்து கடன் வாங்கித் தருமாறு பலரும் நச்சரிப்பதாக 'காரல்கச்சா' என்ற ஊரின் பஞ்சாயத்துத் தலைவரும் புலம்பி வருகிறார். இப்போது, கோஷ் இணையவாசிகளிடம் சிக்கி வறுபட்டு வருகிறார்.