வெங்காயம் வாங்கினால் டி-சட்டை இலவசம்

கொழிஞ்சாம்பாறை: கேரள மாநிலம் கொல்லம் ஆட்சியர் அலுவலகம் அருகே மளிகை கடை நடத்தி வருபவர் பிரகாசன், 32. வெங்காய விலை உயர்வையொட்டி சலுகை வழங்க உள்ளதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.

400 ரூபாய் கொடுத்து 5 கிலோ பெரிய வெங்காயம் வாங்கினால் ஒரு டி-சட்டை வழங்கப்படும் என்று அதில் கூறியிருந்தார். 

அதன்படி 2 நாட்களில் 1500 கிலோ பெரிய வெங்காயத்தை விற்பனை செய்து அதற்கு உரிய டி-சட்டைகளை இலவசமாக வழங்கினார்.

“விலை உயரும்போது வாடிக்கையாளர்கள் மனதை சாந்தப்படுத்த சில இலவசப் பொருட்களை வழங்கினால் விற்பனை அதிகரிக்கும் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியடைவார்கள்,” என்று கடை உரிமையாளர் பிரகாசன் தெரிவித்தார்.