ஹைதராபாத்: தெலுங்கானா தலை நகர் ஹைதராபாத்தில் ஒரே பாதையில் வந்த இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஆறு பயணிகள் காயம் அடைந்தனர்.
நேற்று காலை 10.30 மணியளவில் கச்சகூடா, மலக்பெட் நிலையங்களுக்கு இடையே கர்னூல் சிட்டி-செகந்தராபாத் ரயிலும் லிங்கம்பள்ளி-ஃபாலக்னுமா ரயிலும் மோதிக்கொண்டன.
இதில் கர்னூல் சிட்டி-செகந்தராபாத் ரயிலின் 4 பெட்டிகளும் லிங்கம்பள்ளி-ஃபாலக்னுமா ரயிலின் 3 பெட்டிகளும் பலத்த சேதமடைந்தன.
அங்கு வந்த போலிசாரும் சுற்று வட்டார மக்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
விபத்தில் குைறந்தது ஐந்து பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
இது குறித்து போலிசார் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதி வழியாக செல்லும் பல ரயில்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மோதிய ரயில்களை அகற்றும் வேலையில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

