உண்மையைப் பார்த்து பாஜக அஞ்சுகிறது என்கிறார் பிரியங்கா

உண்மையைப் பார்த்து பாஜக அஞ்சுகிறது என்கிறார் பிரியங்கா

1 mins read
3ffa4a02-0816-4fef-83c3-8d39308500ef
-

புதுடெல்லி: விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் உண்மையை பார்த்து பாரதிய ஜனதா அரசு அஞ்சுகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார். பிரியங்கா தனது டுவிட்டர் பதிவில், "பாஜக அரசின் ஆட்சியில் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதில் விவசாயிகள் தற்கொலைகளை மூடி மறைப்பதிலேயே பாஜக அரசு கவனமாக உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.