மின்னூட்டத்தில் இருந்த கைபேசி வெடித்து இளைஞர் பலி

புவனேஸ்வர்: மின்னூட்டத்தில் இருக்கும் கைபேசியில் பேசுவது ஆபத்து என்று கூறப்படும் வேளையில், மின்னூட்டத்தில் இருந்த கைத்தொலைபேசி வெடித்து ஓர் உயிரைப் பலிவாங்கியுள்ளது. கைத்தொலைபேசியை அருகே மின்னூட்டத்தில் போட்டுவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்த ஒருவர், கைத்தொலைபேசி வெடித்ததால் உயிரிழந்தார். மரணமடைந்த  கட்டுமானத் தொழிலாளி குணா பிரதான் அருகேயுள்ள ஒரு கோயில் கட்டுமானத்தளத்தில் பணிபுரிந்து வந்தார். காவல்துறையினர், இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடல் ஆய்வுக்கூறுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், தினமும் இரவில் தலையணைக்கு அருகே கைபேசியை மின்னூட்டத்தில் போட்டபடி உறங்கும் அனைவருக்கும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.