ரூ.100 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்

ரூ.100 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்

1 mins read
a6f41903-7522-4ed0-ae18-55a20fe45082
-

தெலுங்கானா: சத்திப்பள்ளிப் பகுதியில் 1.11.2019 அன்று கள்ளநோட்டு மாற்ற முயன்ற ஆடவர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி கள்ளநோட்டுக் கும்பலை சேர்ந்த மாதர் என்பவர் உட்பட மேலும் ஆறு பேர் கைதாகினர்.

அவர்களிடம் இருந்து மொத்தம் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் மர்லபாடு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் கள்ளநோட்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் கள்ளநோட்டுகள் மற்றும் நோட்டு அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட கணினி, அச்சு இயந்திரங்கள் போன்றவற்றை கைப்பற்றினர்.