சுடச் சுடச் செய்திகள்

புதுடெல்லி: சுவாசிக்க காற்றை விற்பனை செய்யும் ‘ஆக்சிஜன் பார்’

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சுவாசிக்கத் தகுதியற்ற அளவுக்கு காற்று மாசுபட்டிருப்பதை அடுத்து, அங்கு  கட்டண முறையில் சுத்தமான காற்றை விற்பனை செய்யும் ‘ஆக்சிஜன் பார்’ தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அந்த பார் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அதன் உரிமையாளார், 10 முதல் 15 நிமிடங்களுக்கு சுத்தமான காற்றை  சுவாசிக்க ரூ.299 வசூலிக்கப்படுகிறது என்றார்.

சுவாசிக்கும் காற்றின் மணத்தை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கலாம். 

பிராண வாயுவுடன் நறுமணங்களும் சேர்க்கப்பட்டிருக்கும். விருப்பத்திற்கேற்ப வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.  

சுத்தமான வாயு ஆக்சிஜன் செறிவூட்டிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது, அவை சுற்றுப்புறக் காற்றை எடுத்து நைட்ரஜன் மற்றும் பிற  வளிமண்டல வாயுக்களை ஒரு மூலக்கூறு வடிகட்டியுடன் பிரித்து 95% தூய்மையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன என  அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையில் இருந்தே காற்று மாசுபாடு மிகவும் அபாய அளவைத் தாண்டியது. மனிதர்கள் சுவாசிக்கத்  தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்து உள்ளதால் இம்மாதம் முதல்  தேதி அங்கு மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity