ரூ.20.4 கோடி தங்கம் பறிமுதல்

வாரணாசி: இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள்  உத்தரப்பிரேதசத்தில்  வாரணாசி உள்ளிட்ட மூன்று  இடங்களில் திடீர் சோதனை நடத்தியதில் ரூ.20.4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

கவுகாத்தி, சிலிகுரி, வாரணாசி நகரங்களில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் சோதனையில் 51.66 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. ரூ.20.4 கோடி மதிப்புள்ள 51.66 கிலோ தங்கத்தைக் கடத்தியதாக ஆறு பேரைக் கைது செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.