சீனாவுடனான பேச்சுவார்த்தைக்கு மீண்டும் தயார்நிலையில் இந்தியா

சாவ்பாவ்லோ: இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினைக்குத் தீா்வுகாண அடுத்தகட்ட பேச்சைத் தொடங்கு வது என்று இந்தியா-சீனா கூட்டாக முடிவு செய்துள்ளன.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஸி ஜின்பிங்கும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா். 

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைக்குத் தீா்வு காண்பதற்கு இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.