இந்தியாவில் செலவு செய்யும் திறன் 40 ஆண்டுகளில் குறைவு

இந்தியாவில் நுகர்வோர் செலவினம் 40 ஆண்டுகளில் முதன்முறையாக 2017-18ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் ‘வீட்டு நுகர்வோர் செலவு’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், 2011-12-ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் தனிநபர் செலவழித்த தொகை ரூ.1,501ஆக இருந்தது. அதுவே 2017-18ஆம் ஆண்டில் தனிநபர் மாதச் செலவு ரூ.1,446 ஆகக் குறைந்தது. 2011-12ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3.7 விழுக்காடு சரிவு.

மேலும், இந்தியாவில் சாப்பிடுவதற்கு செலவு செய்யும் தொகையும் குறைந்துள்ளது. இது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த பிரச்சினைகளை எழுப்பும் கவலைக்குரிய போக்கு.

இதற்கிடையே, இந்தியப் பொருளியல் சரிவிலிருந்து எப்போது மீளும் என்று உடனடியாக எதுவும் சொல்வதற்கு இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.