சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

புதுடெல்லி: இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகை சார்பாக இந்த விருது கேரளாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடை பெற்ற நிகழ்வில் கேரள சுற்றுலாத் துறையின் துணை இயக்குநர் இவ்விருதைப் பெற்றுக் கொண்டார். இந்த விருது கேரளாவுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.