கர்நாடகா: பாஜக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,195 கோடி

பெங்களுரு: கர்நாடகாவில் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் எம்.டி.பி. நாகராஜ், தமக்கு ரூ.1,195 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 18 மாதங்களில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 180 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதாக வெளியான தகவல் மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.