மோடி அழைப்பை ஏற்ற கோத்தபய

மோடி அழைப்பை ஏற்ற கோத்தபய

1 mins read
c4bf82bb-f42a-46cb-bcd5-7444a6b55633
கோத்தபய ராஜபக்சே. (படம்: இபிஏ) -

புதுடெல்லி: இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டதாக இந்தியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக தமக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடிக்கு கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்தார்.

வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவது தொடர்பில் தனது தயார்நிலையை கோத்தபய ராஜபக்சே வெளிப்படுத்தி யதாகவும் இந்தியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.