உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கான நிகழ்ச்சி நேற்று காலை டெல்லியில் நடைபெற்றது. நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்துத் தனது தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார் தலைமை நீதிபதி பாப்டே. முன்னதாக அயோத்தி, ரஃபேல் விவகாரம் உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்..

படம்: தகவல் ஊடகம்