சணல் பையில் லட்டு; திருமலை ஆலய நிர்வாகம் முடிவு

ஹைதராபாத்: திருமலையில் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க திருமலை ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இன்னும் சில மாதங்களில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை சணல் பைகளில் கொடுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பிரசாதம் வாங்க நெகிழிப் பைகளுக்குப் பதில்  சணல், காகிதம் போன்றவற்றாலான பைகள், பெட்டிகள் பயன்படுத்தப்பட வேண்டும் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.