ரயில் பயணிக்கு பிரசவம் பார்த்த 'ஒரு ரூபாய் மருத்துவக் குழு'

ரயில் பயணிக்கு பிரசவம் பார்த்த 'ஒரு ரூபாய் மருத்துவக் குழு'

1 mins read
b72d8f8f-eff2-401e-94f7-d915a5c52c79
பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு துரிதமாக செயல்பட்டு சிகிச்சை பார்த்த மருத்துவ குழுவினரை மகாராஷ்டிரா அரசு வெகுவாக பாராட்டியுள்ளது. படம்: டுவிட்டர் -

கர்ப்பிணி ஒருவர் அதிகாலை வேளையில் ரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனிருந்த சக பயணிகள், மும்பை ரயில் நிலையங்களில் பயணிகளுக்காகச் செயல்படும் 'ஒரு ரூபாய் மருத்துவக் குழு'வுக்குத் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, பன்வேல் ரயில் நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் அங்கிருந்த மருத்துவ அறையில் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர். குழந்தையை நலமாக ஈன்றெடுத்தார் அந்தப் பெண்.

பின்னர், தாயும், சேயும் பன்வேல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு துரிதமாக செயல்பட்டு சிகிச்சை பார்த்த மருத்துவ குழுவினரை மகாராஷ்டிரா அரசு வெகுவாக பாராட்டியுள்ளது. இதுபோல கடந்த மாதமும் 29 வயதான இளம்பெண்ணுக்கு இக்குழுவின் மூலம் ரயிலிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. மும்பை வழித்தடத்தில் பயணிகளுக்கு ஏற்படும் உடல்நல குறைவு முதல் பிரசவ வலி வரையிலான அனைத்து விதமான அவசர சிகிச்சையும் செய்து வருகிறது 24 மணி நேரமும் செயல்படும் இந்தக் குழு.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity