தெலுங்கானா எம்எல்ஏவின் குடியுரிமை பறிப்பு

தெலுங்கானா எம்எல்ஏவின் குடியுரிமை பறிப்பு

1 mins read
be286a7c-dc3c-4e93-ac4e-d07e396c5356
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமானேனியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. படம்: ஊடகம் -

தவறான தகவலை அளித்து இந்திய குடியுரிமை பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமானேனியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ள மத்திய உள்துறை அமைச்சு ரமேஷ் ஏற்கெனவே ஜெர்மன் நாட்டுக் குடியுரிமையைப் பெற்றவர் எனச் சுட்டிக் காட்டியுள்ளது.

"கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தபோது உரிய விவரங்களைத் தராமல் முறைகேடாகக் குடியுரிமை பெற்றுள்ளார் ரமேஷ். இதையடுத்து உண்மைகளைத் தவறாகச் சித்திரித்தல், ஆவணங்களை மறைத்தல், மோசடி செய்து குடியுரிமை பெற்றது ஆகியவற்றின் அடிப்படையில் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது," என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்