கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியு தலைமையிலான 36 உறுப்பினா்களைக் கொண்ட புதிய அமைச்சரவையில் நான்கு இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் அனிதா ஆனந்த் என்ற தமிழ்ப் பெண்ணும் ஒருவர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான நவ்தீப் சிங் பெய்ன்ஸ், ஹா்ஜித் சிங் சஜ்ஜன், பா்திஷ் சாக்கா், அனிதா ஆனந்த் ஆகியோா் அமைச்சரவையில் உள்ளனர். இவா்களில் புத்தாக்கம், அறிவியல், தொழில்துறை அமைச்சராக நவ்தீப் சிங் பெய்ன்ஸும், இளைஞா் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பா்திஷ் சாகரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சராக ஹா்ஜித் சிங் சஜ்ஜனும், பொதுச் சேவைகள் துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கனடா அமைச்சரவையில் இணைந்திருக்கும் முதல் தமிழ் பெண் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity