மேற்குவங்காள மாநிலம் தின்ஹாட்டாவில் உள்ள ஒக்ராபரி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், ரபியுல் என்ற இரண்டு பேர், ஒரு வாகனத்தில் இரண்டு பசு மாடுகளை ஏற்றிக்கொண்டு கூச்பெகர் நகரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த சிலர் யாரோ பசு மாடுகளைக் கடத்திச் செல்வதாக கிராமத்தினரிடம் தெரிவித்தனர். உடனே அங்கு திரண்ட கிராம மக்கள் பிரகாஷ், ரபியுல் இருவரையும் சரமாரியாகத் தாக்கினர்.
போலிஸ் வந்து அவர்களை மருத்துவமனையில் சேர்த்தது. ஆனால் அவர்கள் இறந்துவிட்டனர்.இது தொடர்பாக 12 பேரை போலிசார் கைது செய்து உள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity