மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
நீதிபதிகள் ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கண்ணா ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு நேற்று விசாரணையைத் தொடங்கியது.
சிவசேனா, பாஜக வழக்க றிஞர்களின் வாதங்களைக் கேட்ட அமர்வு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதா என நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, மத்திய அரசு இன்று திங்கட்கிழமை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட அவர்கள் வழக்கை இன்று வரை ஒத்திவைத்தனர்.
பாஜகவுக்கு ஆளுநர் அளித்த கடிதத்தை இன்று சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.