பெங்களூருவின் ஹுலிமாவு மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏரி ஒன்றைச் சுற்றிலுமிருந்த தடுப்பு சேதமடைந்ததால் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 250 குடும்பங்களைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சேதமடைந்த தடுப்பைச் சரிசெய்யவும் நீர் இறைப்பான்கள் வழியாக வீடுகளிலிருந்து தண்ணீரை வெளியேற்றவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.