இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பிறக்கும் போதே 20 கால்விரல்கள், 12 கைவிரல்களுடன் பிறந்த ஒரு மாது இப்போது வீட்டோடு ஒடுங்கிக் கிடக்கிறார்.
ஒடிசாவில் கஞ்சாம் என்ற மாவட்டத்தில் இருக்கும் கடாபடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரி நாயக். இவருக்கு வயது 65 ஆகிறது.
குமாரி நாயக் பிறக்கும் போதே இவருடைய கால்களில் 20 விரல்கள் இருந்தன. கைகளில் 12 விரல்கள் இருந்தன.
இவரின் குடும்பம் பரமஏழை என்பதால் சிகிச்சை செய்து கை, கால் விரல்களை அகற்றவில்லை. அதே கிராமத்தில் கூலி வேலை செய்து பிழைத்து வரும் குமாரி நாயக்கை அந்த கிராம மக்கள் ஒதுக்கியே வைத்திருக்கின்றனர்.
குமாரி நாயக் ஒரு பிசாசு என்றும் சூனியக்காரி என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். “நான் பிறக்கும்போதே கை, கால்களில் அதிக விரல்களோடு பிறந்தேன்.
“என்னை பார்ப்பவர்கள் நான் பேய் என்றும் பிசாசு என்றும் பயப்படுகிறார்கள். என்னிடம் யாருமே பழகுவதில்லை. ஆகையால் இப்போதெல்லாம் நான் வீட்டுக்கு உள்ளேயே அடைந்து கிடக்கிறேன். என் கிராம மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்கள்,” என்று குமாரி நாயக் குறிப்பிட்டார்.
யார் கண்ணிலும் படாமல் ஏதோ ஒரு வேலைக்குச் சென்று சம்பாதித்து சாப்பிட்டு காலம் தள்ளி வருவதாக இந்த மாது தெரிவித்தார். இவருக்குக் கணவரோ பிள்ளைகளோ இருப்பதாகத் தெரியவில்லை.