புதுடெல்லி: தன்னை சிவபெருமான் என்று கூறி வரும் நித்யானந்தா சாமியார் (படம்) மீது அதிகாரிகளின் பிடி இறுகி வருகிறது. அந்தச் சாமியாரின் செயலாளராக முன்பு பணியாற்றிய ஜனார்த்தன் சர்மா என்பவர் தன்னுடைய இரண்டு புதல்விகளையும் நித்யானந்தாவிடம் இருந்து மீட்டுத் தரும்படி வெளியுறவு அமைச்சை அணுகியுள்ளார். அவர், தன் மகள்கள் கடத்தப்பட்டதாக போலி சிடமும் புகார் தெரிவித்தார்.
நித்தியானந்தாவின் முன்னாள் சீடரான கனடா நாட்டைச் சேர்ந்த சாரா லாண்ட்ரி என்பவர், நித்யா னந்தா தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாக பெங்களூரு போலிசிடம் புகார் தெரிவித்து உள்ளார்.
இந்தப் பாலியல் வன்கொடுமை புகாரை பெங்களூரு போலிஸ் விசாரிக்கத் தொடங்கிவிட்டது. நித்தியானந்தா வெளி நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்ட தாக குஜராத் போலிஸ் அறிவித்து இருக்கிறது.

