காபூல்: ஆப்கானிஸ்தானில் சரண டைந்துள்ள 900 ஐஎஸ் பயங்கரவாதிகளில் 10 பேர் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கடந்த 12ஆம் தேதி சரணடைந்த 93 பேர் உட்பட இரு வாரங்களில் மொத்தம் 900 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் குடும்பத்தினராவர்.
இந்தியாவை சேர்ந்த பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட 10 பேர் சரணடைந்துள்ளதாகவும் அதில் கேரளத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.
இப்போது இந்த 10 பேரும் காபூலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் யார் என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.