தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

7.4 கிலோ எடையுள்ள சிறுநீரகத்தை அகற்றி சாதனை புரிந்த இந்திய மருத்துவர்கள்

1 mins read
1b40d25e-9212-493f-811c-c086f7602437
நோயாளியின் இடது சிறுநீரகம் நீர்க்கட்டிகள், தொற்றுகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. படம்: ஏஎஃப்பி -

புதுடெல்லியில் 7.4 கிலோ எடையுள்ள சிறுநீரகத்தை அறுவை சிகிச்சைமூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர் இந்திய மருத்துவர்கள்.

ஆட்டோசோமல் டாமினன்ட் பாலிசிஸ்டிக் எனும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த சச்சின் கதூரியா எனும் 56 வயது ஆடவர் மருத்துவ உதவியை நாடினார்.

அவரது இடது சிறுநீரகம் நீர்க்கட்டிகள், தொற்றுகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. கடுமையான வலியுடன் இருந்தார் அவர்.

பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரது சிறுநீரகம் அதிக எடையுடன் இருப்பது தெரிந்தது.

இந்த நோயாளியின் உடலிலிருந்து அகற்றப்பட்ட சிறுநீரகத்தின் எடை 7.4 கிலோ. மனித சிறுநீரகத்தின் சராசரி எடை 120 முதல் 150 கிராம் மட்டுமே. இந்தியாவிலேயே அதிக எடை கொண்ட சிறுநீரகத்தை அகற்றி சாதனை புரிந்துள்ளனர் இந்த மருத்துவர்கள்.

அவரது சிறுநீரகத்தை அகற்றியுள்ள மருத்துவர்கள் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தவுள்ளனர்.

இதற்கு முன்னதாக அமெரிக்காவில் 9 கிலோ எடையில் ஒரு சிறுநீரகமும், நெதர்லாந்து நாட்டில் 8.7 கிலோ எடையில் ஒரு சிறுநீரகமும் அப்புறப்படுத்தப்பட்டது.

இவையே அதிக எடை கொண்ட சிறுநீரகங்கள் என்ற சாதனைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

அந்த வரிசையில் மூன்றாவதாக தற்போது அகற்றப்பட்டுள்ள சிறுநீரகத்தை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity