ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் ஒன்றுக்கு அருகில், தீவிரவாதிகள் கையெறிக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த எதிர்பாராத விதமான தாக்குதலில் சுமார் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பல் பகுதியில் அமைந்திருக்கும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் சர் சையத் நுழைவாயிலுக்கு அருகே வாகனம் நிறுத்தும் பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலிசார் கூறினர்.