புதுடெல்லி: ‘அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஏற்கனவே உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படாது’ என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழக அரசுக்கு உறுதி அளித்துள்ளார்.
அணைகள் பாதுகாப்புக்கென தனி அமைப்பு உருவாக்குவதற்கான மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த மசோதா தமிழக நலனுக்கு எதிராக இருக்கும் என்பதால் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு உள்பட ஐந்து அணைகள் மற்ற மாநிலங்களில் உள்ளன. ஆனால் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. புதிய மசோதாவால் தமிழகத்தின் உரிமை பறிபோகும் என தமிழக அரசு கவலை தெரிவித்து வருகிறது.