புதுடெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மூட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பல்கலைக் கழகத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பெயரை வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
“ஜவஹர்லால் நேரு பெயரில் நாட்டில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனவே அவரது பெயரில் இயங்கும் பல்கலைக் கழகத்திற்கு நேதாஜி பெயரை சூட்ட வேண்டும்.
“இத்தகைய நடவடிக்கை மாணவர்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல் அங்குள்ள சமூக விரோதிகளை அகற்ற பல்கலையை 2 ஆண்டுகள் மூட வேண்டும்,” என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார்.