சிதம்பரத்துக்கு சிக்கல்; பிணை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

சிதம்பரத்துக்கு சிக்கல்; பிணை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

1 mins read
bc08a36d-4e21-4a88-9f64-a7310aac0dd3
மனுவின் மீதான விசாரணை இன்று நிறைவடைந்தது. படம்: ஊடகம் -

சிபிஐ வழக்கில் பிணை பெற்ற முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அமலாக்கத்துறை வழக்கில் பிணை கிடைக்காததால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் பிணை மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்தும், பிணை வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவின் மீதான விசாரணை இன்று நிறைவடைந்தது.

இன்றைய இறுதிக்கட்ட வாதத்தின்போது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 16 நிறுவனங்களை ஆய்வு செய்ததில், ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தமுடைய 12 வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் 12 வெளிநாட்டு சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அறிக்கைகளை பாதுகாப்பாக வைக்கும்படி பதிவகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்