ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த வைகோ டெல்லியில் கைது

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த வைகோ டெல்லியில் கைது

1 mins read
07666367-aff7-46f2-b0cf-2dc6af44256a
-

புதுடெல்லி: இலங்கையின் புதிய அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவி ஏற்றார். அவர் மூன்று நாட்கள் பயணமாக நேற்று புதுடெல்லி வர இருந்த நேரத்தில், அந்த வருகையை எதிர்த்து டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில், மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை டெல்லி போலிஸ் கைது செய்து அழைத்துச் சென்றது.