தெலுங்கானாவின் மாதாப்பூரில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி திடீரென காணாமல் போனார். இதுகுறித்த புகார் பெற்ற காவல்துறையினர் ரங்காரெட்டி மாவட்டத்தின் சட்டப்பள்ளி பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத நிலையில் பிரியங்கா ரெட்டியின் உடலை மீட்டனர்.
நாள்தோறும் மோட்டர் சைக்கிளில் பணிக்குச் சென்று வருவார் பிரியங்கா ரெட்டி.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, அவரது மோட்டார் சைக்கிள் சக்கரம் பழுதாகி விட்டது. பாதி வழியிலேயே மாட்டிக்கொண்ட பிரியங்கா செய்வதறியாது உதவிக்கு யாரேனும் இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.
அப்போது அங்கிருந்த லாரி ஓட்டுநர் பிரியங்காவுக்கு உதவுவதற்கு ஓடோடி வந்தார். உடனே தனது மோட்டார் சைக்கிள் பழுதானது பற்றி தனது வீட்டாருக்குத் தெரிவித்தார் பிரியங்கா.
தன் தங்கையிடம் தொலைபேசியில் பேசியபோது, "வண்டி பழுதாகி விட்டது... எனக்கு ரொம்ப பயமா இருக்கு, நான் டோல்கேட் பக்கமாகத்தான் இருக்கிறேன். எங்கிட்ட கொஞ்சம் நீ பேசிக்கிட்டு இரு" என்று கெஞ்சியிருக்கிறான். ஆனால் சற்று நேரத்தில் பிரியங்காவின் கைத்தொலைபேசி அணைக்கப்பட்டு விட்டது.
இதனால் பிரியங்கா குடும்பத்தினருடன் பதற்றத்துடன் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து பார்த்தனர்.
ஆனால், அங்கு பிரியாங்காவைக் காணவில்லை. உடனே காவல்நிலையம் சென்று புகார் கொடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர் பிரியங்காவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ஹைதராபாத் - பெங்களூர் விரைவுச்சாலைப் பகுதியில் ஷாத்நகர் பாலத்துக்கு அடியில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை பிரியங்காவின் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு, பாலத்துக்கு அடித்தை மீட்க விரைந்தனர். யூகித்தபடியே அது பிரியங்காவின் உடல்தான் என்பதை காவல்துறை உறுதி செய்தது.
பின்னர், இது குறித்த விசாரணையில், அடையாளம் தெரியாத சிலர், வாகனம் ஒன்றில் இந்தப் பகுதிக்கு பிரியங்காவைக் கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் எரித்து கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.