ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகராக உருவாகும் அமராவதிக்கு அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்தின் மீது காலணிகள் வீசப்பட்ட சம்பவத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கு தேச கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு, அமராவதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட தன் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து நேற்று பேருந்தில் சென்றார். அப்போது வேங்கடபள்ளம் அருகே பேருந்து சென்றபோது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அதை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.
எனினும், அதனைப் பொருட்படுத்தாமல் அப்பேருந்து கடந்து செல்ல முயன்றது. அப்போது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், அப்பேருந்தின் மீது கற்களையும் காலணிகளையும் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் பேருந்தின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
பின்னர் போலிசாரின் பாதுகாப்புடன் பேருந்து அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவம் பற்றி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

