லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் சொன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சலாய் பன்வா என்ற தொடக்கப்பள்ளிக்கூடத்தில் ஒரு வாளி தண்ணீரில் வெறும் 1 லிட்டர் பாலை ஊற்றி கலந்து 81 மாணவ, மாணவியருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பிரச்சினையாகி உள்ளது.
சமையல்காரர் தண்ணீரில் பாலைக் கலக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிபரபரப்பைக் கிளப்பியது.
இதையடுத்து துறை சார்ந்த அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கூட நிர்வாகிகளையும் சமையல்காரரையும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தைக் கருத்தில் கொண்டு மதிய உணவுத் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருவதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.