வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அனுப்பிய பணம் US$80 பி.

புதுடெல்லி: வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 2019 நிலவரப்படி 17.5 மில்லியன் பேர் என்றும் இந்த அளவுக்கு வேறு எந்த நாட்டவரும் வெளிநாடுகளில் வசிக்கவில்லை என்றும் ஐநா அமைப்பின் புதிய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளையும் சேர்ந்த 272 மில்லியன் பேர் தங்கள் தாய்நாட்டைவிட்டு வெளிநாடுகளில் வசிப்பதாக ‘அனைத்துலக குடியேறிகள் கணக்கெடுப்பு 2019’ என்ற அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இவர்களில் மூன்றில் இரண்டு பேர் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்று இருக்கிறார்கள். ஐநா அமைப்பின் பொருளியல் சமூக விவகாரத் துறையின் மக்கள் தொகைப் பிரிவு அந்த அறிக்கையை நேற்று வெளியிட்டது.

தங்கள் நாட்டைவிடுத்து வெளிநாடுகளில் வசிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியர்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

இதனிடையே, வெளிநாட்டில் வாழும் மக்கள் தங்கள் நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பணத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து இந்தியா முதலாவது இடத்தில் இருந்து வருவதாக உலக வங்கி தெரிவித்து இருக்கிறது. வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் 2018ல் ஏறக்குறைய US$80 பில்லியன் தொகையை இந்தியாவுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்று நேற்று உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இதில் US$67 பில்லியன் தொகையுடன் சீனா இரண்டாவது இடத்திலும் US$34 பில்லியன் தொகையுடன் மெக்சிகோ, பிலிப்பீன்ஸ் அடுத்த இடத்திலும் இருக்கின்றன. எகிப்து நாட்டினர் வெளிநாடுகளில் இருந்து US$26 பில்லியனைத் தங்கள் நாட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். வளரும் நாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகாரபூர்வமாக அனுப்பப்படும் தொகை 2018ல் 10.8 விழுக்காடு அதிகரித்து மொத்தம் US$528 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அதிகரிப்பு 2017ல் 7.8 விழுக்காடாக இருந்தது. அதிக வருவாய் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு அனுப்பும் தொகையையும் சேர்த்து கணக்கிடும்போது 2018ல் எல்லை கடந்து அனுப்பப்படும் மொத்த தொகை 10.3 விழுக்காடு கூடி US$689 மில்லியனாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்து இருக்கிறது.

இந்தியர்கள் கடந்த மூன்றாண்டு காலமாக குறிப்பிடத்தக்க அளவில் தங்கள் நாட்டிற்குப் பணம் அனுப்பி வருகிறார்கள். 2016ல் இந்த அளவு US$62.7பில்லியன் ஆக இருந்தது.

2017ல் US$65.3 பில்லியனாக அது கூடியது. வெளிநாட்டினர் இந்தியாவுக்கு அனுப்பும் தொகை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 விழுக்காட்டுக்குச் சமமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!