கல்வீச்சுக்கு பயந்து தலைக்கவசத்துடன் வெங்காயம் விற்பனை

வெங்காயத்தின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பல பகுதிகளிலும் ரூ.120க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம், ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வெங்காயத்தை வாங்க மக்கள் திரண்டனர். அத்துடன் சில இடங்களில் மக்களிடையே தள்ளுமுள்ளும் சண்டையும் மூண்டதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. ஒரு சில இடங்களில் வெங்காயம் விற்பனை செய்யும் ஊழியர்கள்  மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் வெங்காயம் விற்பனை செய்யும் ஊழியர்கள் தலைக்கவசம் அணிந்தபடி விற்பனையில் ஈடுபட்டனர். படம்: ஊடகம்