பெங்களூரு: சர்ச்சைக்குப் பெயர் பெற்றவர் நித்தியானந்தா சாமியார். இவர் பெங்களூருவை அடுத்த ராமநகர் மாவட்டம் பகுதியில் பரமஹம்ச நித்தியானந்த தியானபீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஜனார்த்தன சர்மா என்பவர் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரும் அளிக்கப்பட்டது. போலிசாரிடம் சிக்குவதைத் தவிர்க்க அவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் குஜராத் போலிசார் சனிக்கிழமை ராமநகர் மாவட்டத்தில் உள்ள அவருடைய ஆசிரமத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.
நித்தியானந்தா சாமியார் குறித்து ஆசிரமத்தில் உள்ள அவருடைய சீடர்களிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. நித்தியானந்தா மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு புகார் கொடுத்துள்ளனர்.