ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த புதன்கிழமை இரவு கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் நடந்த இடத்தில் குற்றவாளிகளிடம் போலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
பிரியங்கா ரெட்டி, வயது 25, கடந்த 27ஆம் தேதி அவசர பணி நிமித்தமாக மாதாப்பூர் கால்நடை மருத்துவமனைக்கு பணிக்குச் சென்றுள்ளார்.
ஐதராபாத்தில் சம்சாபாத் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 2 சக்கர வாகனத்தில் சென்றவர், வழியில் ஒரு சுங்க சாவடி அருகே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து கால்டாக்சியில் பணிக்குச் சென்றுள்ளார்.
இரவு 9 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்புவதற்காக 2 சக்கர வாகனத்தை எடுக்க சுங்க சாவ டிக்குச் சென்றபோது அவரது இரு சக்கர வாகனம் பஞ்சராகி நிற்பதைக்கண்டார். அப்போது அவருக்கு உதவ வந்த நால்வர் பாலியல் வன்கொடுமை செய்து அவரி எரித்து விட்டனர்.
மறுநாள் ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள சாத்நகரில் ஒரு பாலத்தின் அடியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லாரி டிரைவர்கள் முகமத் ஆரிப், சென்னகேசவ் மற்றும் கிளீனர்கள் ‘ஜொள்ளு’ சிவா, ‘ஜொள்ளு’ நவீன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரி யங்கா ரெட்டியை அவர்கள் தூக்கிச் சென்று கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்து பின்பு உடலை எரித்து விட்டது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை அன்று குற்றம் நடந்த இடத்திற்கு நால்வரில் இருவர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
ஷாம்ஷாபாத்-சாத்நகர் இடையே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாலத்திற்கு அடியில் பிரியங்கா ரெட்டி எரிக்கப்பட்ட இடத்தில் நடந்தவற்றை ‘ஜொள்ளு’ சிவா, ‘ஜொள்ளு’ நவீன் ஆகியோர் விவரித்தனர்.
சம்பவத்தன்று பிரியங்கா ரெட்டியின் ஸ்கூட்டரை இருவர் ஓட்டிச் செல்ல, இருவர் டிரக்கில் பின்தொடர்ந்து சென்றனர். அந்த டிரக்கில் பிரியங்கா ரெட்டியின் சடலம் ஏற்றப்பட்டிருந்தது.
நெடுஞ்சாலையில் பாலத்துக்கு அடியிலிருந்த இடத்துக்கு வந்ததும் நால்வரும் பிரியங்கா ரெட்டியின் உடலைக் கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நால்வரும் எரித்துக் கொல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர் ஜெயா பச்சன், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை அடித்தே கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
“இப்படிச் சொல்வது கொடூரமாக இருக்கலாம். ஆனால் இத்தகையோரை மக்கள் முன்னி லையில் அடித்துக் கொல்லப்பட வேண்டும்,” என்றார்.
கட்சி பாகுபாடின்றி மற்ற உறுப்பினர்களும் தெலுங்கானா பெண் எரித்துக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே பெண் டாக்டர் கொலை வழக்கை விரைவு நீதி மன்றம் மூலம் விசாரிக்க தெலுங் கானா முதல்வர் உத்தரவிட்டார்.