புதுடெல்லி: தெலுங்கானாவில் நடந்த பாலியல் கொடுமை நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறு வயது சிறுமி மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். டோங்க் மாவட்டம் அலிகார் பகுதியைச் சேர்ந்த 1ஆம் வகுப்பு சிறுமி சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற பிறகு மாலையில் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து சிறுமி காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிக்கு அருகே உள்ள புதர்களுக்கு இடையே சிறுமி ரத்த வெள்ளத்தில் கொலையுண்டு கிடந்தார். அவரது சீருடை பெல்ட்டினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட் டிருந்தார். சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலிசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறு வயது சிறுமி மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை
1 mins read

