நாய்களைப் ‘புலிகளாக்கிய’ விவசாயி; தவிக்கும் குரங்குகள்

கர்நாடகாவின் தீர்த்தஹள்ளிக்கு அருகில் உள்ள நல்லூர் கிராமத்தில் வசித்துவரும்  விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் பயிர்களைக் காப்பதற்கு புதிய உத்தி ஒன்றைக் கையாண்டு வருகிறார். தனது வளர்ப்பு நாய்களைப் ‘புலிகளாக்கி’ குரங்குகளை விரட்டி வருவதைக் கண்ட அந்த கிராம மக்கள் தாங்களும் அதே உத்தியைப் பின்பற்றி வருகின்றனர்.

50 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் காப்பி, பனை விளைவிக்கும் ஸ்ரீகாந் கவுடாவுக்கு குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்து வந்தது.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினர் ஒருவர் புலி பொம்மையை வைத்து குரங்கை விரட்டியதை நினைவுகூர்ந்த அவர், தனது நாய்களுக்கு கருப்பு வண்ண சாயத்தால் கோடுகள் வரைந்து ‘புலிகளைப்’ போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்.

இந்த நாய்களைக் கண்டு குரங்குகள் அஞ்சுவதாகவும் பயிர்களைக் காக்க முடிவதாகவும் கூறுகிறார் ஸ்ரீகாந்த். இப்போது குரங்குகள் உணவுக்காக வேறு ஊர்களுக்கு இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity