'சிதம்பரத்தை பாஜக பழிதீர்க்கிறது'

'சிதம்பரத்தை பாஜக பழிதீர்க்கிறது'

1 mins read
3db72020-3900-40ea-b408-9b385a43fd21
-

புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி, அரசியல் எதிரிகளைப் பழிவாங்கி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

எதிரிகள் மீது வழக்கு தொடுப்பதுதான் புதிய இந்தியாவா என மகளிர் காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டு நூறு நாட்கள் ஆனதையொட்டி, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. ஒரு தனிமனிதரின் தனிப்பட்ட சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என காங்கிரஸ் அமைப்பு பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.